Monday, July 8, 2013

மேற்கத்திய நாடுகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சியின் படுக்கையறை பங்காளிகள்! - ஸ்நோடன்

தற்போது புகார் கூறிக்கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்துதான் அமெரிக்கா தனது உளவு வேலைகளை மேற்கொண்டது என்று அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பணியாளர் எட்வர்ட் ஸ்நோடென் கூறியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு ஏஜன்சியான என்.எஸ்.ஏ, பல்வேறு நாடுகளின் சைபர், டெலிகம்யூனிகேஷன் தகவல்களை திருடியது குறித்த விபரங்களை வெளியிடும் முன்பு ஸ்நோடன் அளித்த நேர்முகத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் ஸ்நோடெனின் நேர்முகத்தை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியும் ஒரு சில மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவின் என்.எஸ்.ஏவின் படுக்கையறை பங்காளிகள் என்று நேர்முகத்தில் ஸ்நோடென் தெரிவித்துள்ளார்.
ஃபாரின் அஃபெயர்ஸ் டைரக்ட்ரேட் என்று அறியப்படும் என்.எஸ்.ஏவின் துறை வழியாக வெளிநாடுகளில் உள்ள ரகசிய புலனாய்வு பிரிவுகளின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. சம்பவம் வெளியானால் இந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
அமெரிக்கன் க்ரஃப்டோக்ராஃபி(சங்கேத மொழி) நிபுணர் ஜேக்கப் ஆப்பல்பாம், திரைப்பட தயாரிப்பாளர் லாரா போயிட்ராஸ் ஆகியோர் இணைந்து சங்கேத மொழி வடிவில் மின்னஞ்சல் மூலமாக ஸ்நோடனும் நேர்முகத்தை நடத்தியுள்ளனர்.
மேற்காசியா போன்ற பிராந்தியங்களில் இருந்து ஜெர்மனி வழியாக கடத்தப்படும் தகவல்களை பரிசோதிப்பதற்கு ஜெர்மனியின் வெளிநாட்டு உளவு நிறுவனமான பி.என்.டிக்கு, என்.எஸ்.ஏ போதிய கட்டமைப்புகளை வழங்கியதாக ஸ்நோடன் கூறுகிறார்.
-New India.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza