புதுவலசையில் அரபி ஒலியுல்லாஹ் பள்ளிகளில் கடந்த 2012-2013 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படித்த மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்று கிழமை (30.06.2013) மாலை 5 மணியளவில் நமதூர் மதரஸா வளாகத்தில் சிறப்பாக நடந்தது. மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதல் இவ்விழாவை முஸ்லிம் ஜமாஅத் தர்ம பரிபாலன சபையுடன், EPMA மற்றும் தாசின் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றன. அதே போல் இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
கடந்த கல்வி ஆண்டில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளுடன் ரொக்கப் பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த கல்வி ஆண்டில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 33 மாணவ, மாணவிகளுக்கு நினைவுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும், இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த பரிசுகளை MDPS, EPMA, தாசின் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
மதிப்பெண் விவரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் புதுவலசை ஜமாத்தார்கள், சங்கத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment