அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த நேர்காணல் ஒன்றில், குஜராத் 2002 இனப்படுகொலைகளை தன் வாகனத்தில் சிக்கிய நாய்க்குட்டி என்று ஒப்பிட்டிருந்தார்.
மோடியின் இந்த குரூரப் பேச்சுக்கு நாடெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், மோடியை கைது செய்ய க் கோரி, ஹைதராபாத்தின் சந்தோஷ் நகர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் குலாம் ரப்பானி இருபக்க அளவில் மனு எழுதி முறையிட்டுள்ளார். 'இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்துஉள்நோக்கத்தில் நாய்க் குட்டி என்று கூறி இழிவுப்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளார். இந்த[ பேச்சு இந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளதால் மோடியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குலாம் ரப்பானி கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள் அதை காவல் நிலைய நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளனர். ஆயினும் இது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
'முறையீட்டாளர் கூறியுள்ள பேட்டியும், குறிப்பிட்ட அச்சம்பவமும் எங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெறவில்லை. எனினும், இந்த மனு தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு இம்மனுவை அனுப்பி வைப்போம்' என ஹைதராபாத் நகர காவல்துறை துணை ஆணையர் தருண் ஜோஷி கூறியுள்ளார்.
INFO: inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment