இஸ்தான்புல்:இஸ்லாமியவாதிகள் ஆளும் துருக்கியில் பூரணமான மத சுதந்திரத்தை அனுபவிப்பதாக கிறிஸ்தவ மத நிறுவனத்தின் இயக்குநரான ரோமன் பாதிரியார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தைக் குறித்து பயப்படும் அளவுக்கு ஒரு சிறு சம்பவங்களை கூட எங்களது அண்டை அயலார்களான முஸ்லிம்களிடம் இருந்து நாங்கள் சந்திக்கவில்லை.
துருக்கியில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களின் நிலையும் இதுதான். துருக்கியில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் 1920 களில் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் ஆவர். ஆனால், அவர்கள் அவர்களது முன்னோர்களின் வரலாற்றை எல்லாம் நினைவுக் கூர்வதில்லை. எல்லோரும் எவ்வித பாரபட்சமும் இன்றியே துருக்கியில் வாழ்ந்து வருகின்றனர்.
மியான்மர் மற்றும் சிரியாவில் துன்பங்களை சந்தித்துவரும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற வகையில் எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். உலக சமூகம் இப்பிரச்சனைகளில் தீர்வு காண விரைவில் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment