டெஹ்ரான்:தாக்குதல் நடத்துவோம் என்ற இஸ்ரேலின் மிரட்டலை பொருட்படுத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இத்தகைய விவேகமற்ற முயற்சிகளால் ஏற்படும் எதிர்கால பின்விளைவுகள் குறித்து இஸ்ரேலுக்கு தெரியும் என்று ஈரான் கூறியுள்ளது.
அர்த்தமற்ற பேச்சுக்களை நாங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என்று ஈரானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பெரஸ்த் கூறியுள்ளார். தாக்குதல் மிரட்டல் என்பது கோழைகளின் அடையாளம் என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி கூறுகிறார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக வலுவான தாக்குதலை நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்கும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment