புதுவலசையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. NWF என்ற பெண்கள் அமைப்பு சர்பாக பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி புதுவலசையில் நேற்று (06.02.2013) மாலை நமதூர் மெயின் ரோட்டில் உள்ள NWF சகோதரி ஒருவரின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.((மேலே உள்ள படம் தொடர்புடையது அல்ல. அடையாளத்திற்காக மட்டும் ))
இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "அன்றைய சமுதாயம்" என்ற தலைப்பில் சகோதர்.இமாம் நூருல் ஹஸன் பாகவி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் அன்றைய சஹாபிய பெண்களின் வரலாறுகளையும் அதில் நமக்குள்ள படிப்பினைகளையும் அழகிய முறையில் எடுத்து கூறினார். அடுத்ததாக சகோதரர். ஃபைசல் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் மறுமையில் கிடைக்கும் வாழ்க்கையே முடிவில்லாதது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருப்பதையும், அத்தகைய மறுமை வாழ்க்கையின் வெற்றிக்கான தளமாக இவ்வுலக வாழ்க்கையை பயன்படுத்தி கொள்ள
வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், இஸ்லாம் வலியுறுத்தக் கூடிய தொழுகை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை பின்பற்றி நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்து கூறினார். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
செய்தி: சகோதரர். ரிஸ்வான்



0 கருத்துரைகள்:
Post a Comment