புதுவலசையில் நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் "ரமலானும் நாமும்" என்ற தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் NWF-ன் மாவட்ட தலைவி சகோதரி ஜாஹிரா பானு ஆலிமா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்தினார்கள். தனது உரையில் பெண்கள் பேணவேண்டிய ஒழுக்கம் பற்றியும், இஸ்லாதின் கடமைகளில் ஒன்றான நோன்பில் நமது அமல்கலை எவ்வாறு சரிசெய்து கொள்வது? ஜகாதின் சட்டதிட்டம் என்ன? அதனை கடைபிடிப்பதால் விளையும் நன்மைகள் என்ன? போன்ற பல பயன் தரும் தகல்வகளை சஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகளோடு தொடர்பு படுத்தி கூரியது மிகவும் சிறப்பாகவும் கேட்க கூடியவர்களை சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது அல்ஹம்துலில்லாஹ். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இன்ஷாஅல்லாஹ் வருகிற மாதம் மேற்க்குத்தெருவில் பெண்கலுக்கான பயான் நடைபெறும் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களையும் கலந்து கொள்ள ஏவுங்கள் உறுதியான விழிப்புணர்வுள்ள சமுதாயம் உருவாகிட உதவிடுங்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment