Saturday, October 9, 2010

புதுவலசையில் NWF - ன் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் வீணான பேச்சுக்களிலும், தொலைக்காட்சிகளிலும் தனது நேரங்களை செலவழித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும், இறையச்சமும் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலை மாற மக்களிடையே அல்லாஹ்வின் கட்டளைகளையும், அண்ணல் நபியவர்களின் நல்லுபதேசங்களையும் கொண்டு போய் சேர்க்கவேண்டியது நம்மீது கடமையாகும். அந்த அடிப்படையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) மாதம்தோறும் பெண்களுக்கென மார்கக சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகலை நடத்தி வருகிறது. இந்த மாதம் 08-10-2010 வெள்ளிக்கிழமை மாலை 5:15 மணிக்கு நமதூர் காயிதேமில்லத் நகரில் நடைபெற்றது. இதில் " இறையச்சம் " என்ற தலைப்பில் NWF-ன் மாவட்டத்தலைவி சகோதரி ஜாஹிரா பானு ஆலிமா உரை நிகழ்த்தினார்கள். அந்த உரையில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும், சாஹாபி பெண்மணிகள் தனது வாழ்க்கையில் அல்லாஹ்வுக்கு அஞ்சிய விததையும் பற்றியும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்கள். இதில் திறலாக பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலிலாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.


செய்தி : அஸ்வர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza