Sunday, September 14, 2014

புதுவலசையில் NWF நடத்திய மாதாந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி...!

சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி புதுவலசையில் 12.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் கிழக்குத்தெருவில்  நடைபெற்றது.


சகோதரி.ஜாஹிரா பானு ஆலிமா அவர்கள்  ''கண்ணியம்'' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza