காரைக்காலை சார்ந்த பெண் இன்ஜினியர் வினோதினியை சுரேஷ் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் கடந்த தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றிருந்த போது அவர் மீது ஆஸிட்டை வீசினார். தந்தையுடன் வந்து கொண்டிருக்கும் போதே இந்த கொடுமை நடந்தது. இரு கண்களிலும் பார்வையை இழந்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் பிப்ரவரி 12 அன்று மரணம் அடைந்தார்.
அவரின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் மற்றும் வினோதினியின் குடும்பத்திற்கு புதுவை அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர் .
0 கருத்துரைகள்:
Post a Comment