வரப்போகும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் நிச்சயம் போ்ட்டியிட முடியாதபடி உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிசன் தெரிவித்துள்ளது.
சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்து தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்த கோரிக்கை அநியாயத்திற்கு 15 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.




