எஸ்.டி.பி.ஐ ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநில செயற்குழு ஜனவரி 10,11 ஆகிய இருநாட்கள் நெல்லையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம்.ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார் .மாநில பொதுச் செயலாளர்கள் நெல்லை முபாரக்,அப்துல் ஹமீது,மாநில செயலாளார்கள் அப்துல் சத்தார், வி.எம்.அபுதாஹிர்,செய்யது அலி,கே.செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழுவின் துவக்கமாக கடந்த இரண்டு வருட நிர்வாகம் சம்பந்தமாக மாநிலத்தலைவர் விரிவான உரையாற்றினார். மேலும் தமது உரையில் எதிர் வரும் தேசிய மற்றும் தமிழக அரசியல் மாற்றங்களை கோறிய அவர் அதனை எதிர் கொண்டு அரசியல் களத்தில் சாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதில் அனைத்து மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரெத்தினம் அண்ணாச்சி, பாத்திமா ஆலிமா, பாத்திமா கனி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளார் அம்ஜத் பாஷா நன்றி கூறினார்.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் ஒருதலை பட்ச நடவடிக்கையால் வறுமைக்கும், இழப்பு மற்றும் தற்கொலைக்கு தள்ளப்பட்டு விட்ட தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உரிய நிவாரணம் அளிக்கவேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சூழ்நிலையை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏக்கருக்கு ரூ.45,000/ இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தேசிய பேரிடர் தொகையாக ரூபாய் 1000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் . மேலும் காவிரி நீர் விவகாரத்தில் தொடர்ந்து அத்துமீறலை செய்து வரும் கர்நாடக அரசின் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
- நடக்கவிருக்கும் 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடும் என தீர்மானிக்கப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விபரங்கள் மற்றும் தொகுதி பணிக்குழு உறுப்பினர்கள் பற்றி விவாதிக்கப்பட்டது தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளில் செயல்வீரர்கள் மற்றும் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் தலைமையில் தொடர்ந்து நடத்தப்படும் என மாநில செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- புதிய மாநில செயற்குழு உறுப்பினராக செங்கோட்டை நிஜாம் முஹைதீன் அவர்கள், ஜனவரி 10 ,11ஆம் தேதிகளில் நடைபெற்ற செயற்குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கட்சியில் உள்கட்டமைப்பு தேர்தல் எதிர்வரும் ஜனவரி 15 முதல் மார்ச் வரை நடைபெற உள்ளது. கிளை முதல் தொகுதி வரையிலான கட்டமைப்பு நிர்வாகங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல் வீரர்கள் எண்ணிக்கை உட்பட விரிவாக விவாதிக்கப்பட்டு தேர்தல் நடக்கும் நாட்கள் முடிவு செய்யப்பட்டது. நடக்கவிருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்திட கிளை முதல் மாவட்ட அளவில் தேர்தல் பொறுப்பாளர்கள் (returning officer) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மண்டல அளவில் வரும் 12,13 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
- எதிர் வரும் மார்ச் மாதத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு திருச்சியிலும், தேசிய பொதுக்குழு கோவையிலும் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட மாநாடுகள் நடைபெறவிருப்பதால் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் மன மகிழ்வோடும், புத்துணர்வோடும் பணி செய்ய வேண்டும் என மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
- மக்களுக்கான வாழ்க்கை ஆதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு பிரிவுகளில் மானியம் அளிப்பது முக்கிய வழிமுறையாக தொடர்ந்து வந்தாலும் , உலக வங்கியின் நிர்பந்தத்தின் காரணமாக மத்திய அரசு மக்களுக்கான மானிய உதவிகளை படிப்படையாக குறைத்து வருவது கண்டனத்துக்குரியது. மேலும் மாநில அரசுகளையும் மானிய உதவிகளை குறைக்க வலியுறுத்துவது மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. அதே சமயத்தில் நேரடியாக மானியத்தை குறைத்தால் மக்களின் எதிர்ப்பு ஏற்படும் என்பதனால் மறைமுகமான திட்டங்களின் மூலம் மானியங்களை குறைக்க முயற்சிக்கிறது. எனவே மானிய உதவிகள் எவ்வித குறைப்பும் இன்றி தொடர வேண்டும் என இச்செயற்குழு மத்திய – மாநில அரசை கேட்டுக்கொள்கிறது.
- மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதிக்க மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் இதுவரை அதற்கான வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது கண்டனத்துக்குரிய செயலாகும். எனவே மத்திய அரசு உடனடியாக மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றும் தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துரைகள்:
Post a Comment