தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்தவும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 45 ஆயிரம் ருபாய் நஷ்டயீடு வழங்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, நேற்று (09.01.2013) புதன்கிழமை, காலை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தமிழக தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் தஞ்சை இரயில் நிலையத்தில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.சுமார் 500 க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டர்கள் இரயிலை மறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும்,தமிழக விவசாயிகள் நிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாகவும் எஸ்.டி.பி.ஐ கட்சி இரயில் மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. மத்திய அரசு- உச்சநீதிமன்றம்,நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 45,000/ நஷ்ட ஈடாக மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் மேலும் டெல்டா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசு இதனை பேரிடராக அறிவித்து ,தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூபாய் 1000 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்துள்ளோம். மத்திய ,மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கான எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்புகிறோம்.அவ்வாறு நிறைவேற்ற தவறும் பட்சத்தில்,தஞ்சை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தவறும் பட்சத்தில் அடுத்தடுத்த போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும். விவசாயிகளின் நலனுக்காக எஸ்.டி.பி.ஐ கட்சி எப்போதும் துணை நிற்கும் என்பதனை தெரியபடுத்தி கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment