Saturday, January 12, 2013

விசுவருபம் படம் கண்டிப்பாக திரையிடப்படும் முன்பு முஸ்லிம்களிடம் திரையிட்டுகாட்டப்படும்-நடிகர் கமலஹாசன்



அண்மையில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காட்சிகள் அமைக்கபட்டு இருந்தது அதனை தொடர்ந்து துப்பாக்கி பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு முஸ்லிம்களுக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்கினர் இதற்கு பிறகு விசுவருபம் படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக அணுகி வருகிறது ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கண்டிப்பாக முஸ்லிம்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் எனக் கூறியிருந்தன.

நடிகர் கமலிடம் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருதீன் தன் தரப்பு கருத்தை எடுத்து வைத்த பொழுது

அதன் அடிபடையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் நடிகர் கமலஹாசனை சந்தித்து அவரிடம் விசுவருபம் படம் சமந்தமாக  விளக்கம் கேட்டனர்.முஸ்லிம்களின் தரப்பு கோரிக்கைகளை கவனமாக கேட்டார் கமலஹாசன், பின்னர் அவருடைய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் கண்டிப்பாக விசுவருபம் படம் திரையிடப்படும் முன்பு முஸ்லிம்களிடம் தலைவர்களிடம் திரையிட்டுகாட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்

இதற்கிடையே உள்துறை செயலாளரிடம் இது தொடர்பாக இந்த திரைபடம் குறித்து மனு அளிக்கபட்டது அப்பொழுது உள்துறை செயலாளர் கண்டிப்பாக மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார் எனவே கமலஹாசன் இந்த திரைபடத்தை திரையிட்டு காட்டும்வரை எந்த வித அனுமானதிற்க்கும் இடம் அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கேட்டு கொள்கிறது


இச்சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் ,இந்திய இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகி முனீர்,இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.முஹம்மத்  ஹனீபா,ஜம்மிபத்துல் உலமாயே ஹிந்த்  நிர்வாகி மன்சூர் காஷிஃபி,வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தலைவர் திரு.சிக்கந்தர், தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் திரு.அச.உமர்பாரூக் உள்பட பல அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza