Saturday, August 11, 2012

அஸ்ஸாம்:அகதி முகாம்களிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் – ஷப்னம் ஹாஷ்மி

Assam shabnam hashmi  claim bias in camps
புதுடெல்லி:அஸ்ஸாமில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அகதிகள் முகாமிலும் கடுமையான பாரபட்சம் காட்டப்படுவதாக மனித உரிமை ஆர்வலரும், தேசிய ஒருமைப்பாட்டுக்குழு உறுப்பினருமான ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த ஷப்னம் ஹாஷ்மி அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும் அவர் கூறியது:போடோ அல்லாத மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. சரியான உணவுகளோ, அத்தியாவசியப் பொருட்களோ கிடையாது. போடோக்கள் தங்கியுள்ள முகாம்களில் இறைச்சியும், மீனும் உள்பட பொருட்கள் விநியோகிக்கப்படும் பொழுது இதர மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் வாடுகின்றனர்.

ஹிந்து யாத்ரீகர்கள் இந்தியா செல்ல பாகிஸ்தான் அனுமதி!

Hindu pilgrims allowed entering India
இஸ்லாமாபாத்:ஹிந்து யாத்ரீகர்களை வாகா எல்லையில் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்கு செல்ல பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்வதற்காக 250 ஹிந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் வாகா எல்லையில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் குடியேற்றம் நடத்துவதற்காக செல்வதாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து பாக்.அரசு அவர்களை எல்லையில் தடுத்து வைத்தது.

Thursday, August 9, 2012

ரோஹிங்கியா முஸ்லிம் படுகொலை: துருக்கி தலைவர்கள் மியான்மர் பயணம்!

Turkish Delegation travels to Myanmar
அங்காரா:ரோஹிங்கியா முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு பலிகடாக்களாக மாறியுள்ள சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப்பூர்வ தலையீட்டைக் கோரி துருக்கி நாட்டு தலைவர்கள் மியான்மர் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவும், பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனாவும் நேற்று  முன்தினம் மியான்மருக்கு புறப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“வாழ்வதற்காக போராடுபவர்கள்” – இன்று சர்வதேச ஆதிவாசிகள் தினம்!

வாழ்வதற்காக போராடுபவர்கள்
ஐக்கிய நாடுகள் சபை 2005-15 காலக்கட்டத்தை மரபின மக்களின்(ஆதிவாசிகள்) தசாப்தமாக கடைப்பிடிக்கிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி சர்வதேச ஆதிவாசிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“Indigenous Media, Empowering Indigenous Voices” (சுதேச ஊடகங்கள் மரபின மக்களின் குரல்களை பலப்படுத்துதல்) என்ற முழக்கத்தை இவ்வாண்டு முழக்கமாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளது. ஆதிவாசி சமூகங்களின் பொருளாதார-சமூக முன்னேற்றம், கலாச்சார-சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, சுகாதாரம் பேணல், மனித உரிமைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றிற்கு கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதே இத்தினம் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

எகிப்து:உளவுத்துறை தலைவர் நீக்கம் – முர்ஸி அதிரடி!

Mursi sacks intelligence chief
கெய்ரோ:எகிப்து உளவுத்துறை தலைவர் முராத் முவாஃபியிடம் பதவி விலகுமாறு அதிபர் முர்ஸி உத்தரவிட்டுள்ளார்.
ஸினாயில் ராணுவத்தினருக்கு எதிராக மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 எகிப்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய உளவுத்துறை தலைவராக முஹம்மது ரஃபாத் அப்துல் வாஹிதை முர்ஸி நியமித்துள்ளார்.

Wednesday, August 8, 2012

பத்ர் தரும் பாடம்!

பத்ர் தரும் பாடம்!
மனித குலத்திற்கு நேர்வழி காட்டும் புனித திருக்குர்ஆனை(2:185) இறக்கியருள அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் தான் ரமலான்.
மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை  எக்காலத்திலும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில்  இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை – இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.

குவைத்தில் KIFF நடத்திய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி!

pic1
குவைத்:குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம்(KIFF) பாஹீல் கிளை நடத்திய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நேற்று  மங்காபில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
சரியாக மாலை 5.45க்கு சகோதரர். ஷகீல் அவர்களின் துவக்க உரையுடன் இனிதே ஆரம்பமானது. மேலும் நிகழ்ச்சி அனைத்தையும் அவரே தொகுத்து வழங்கினார்.
பின்னர் கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்கள் “வெற்றி அடைந்த குரான்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள், அவர் குறிப்பிடும் போது “குரானை வாழ்வியல் நெறியாகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்தால் ஈருலகிலும் வெற்றியாளர்களாக திகழ முடியும் என்ற உண்மையை நினைவுபடுத்தினார்கள், அதை பல வரலாற்று சம்பவங்கள் மூலம் அழகுற எடுத்துரைத்தார்கள்”.

ஊழல்,கறுப்புப் பணத்திற்கு போராடுவதாக வேடம் போடும் ராம்தேவின் 4 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி அம்பலம்!

Anti-corruption crusader Ramdev a tax evader
புதுடெல்லி:10 ஆண்டுகளுக்கு முன்பு பழுது பார்க்க கூட காசில்லாமல் ஓட்டை சைக்கிளில் திரிந்துவிட்டு யோகாவின் பெயரால் ஆன்மீக மோசடி புரிந்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பவர் பாபா ராம் தேவ்.
திடீரென நாட்டின் மீது ஏற்பட்ட கரிசனத்தால் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்காக போராடுகிறேன் பேர்வழி என கூறி தடாலடி ஹைடெக் போராட்டங்களில் இறங்கினார்.

அமெரிக்காவில் மஸ்ஜித் தீக்கிரை!

US mosque razed in fire
வாஷிங்டன்:அமெரிக்காவில் மிசெளரி மாநிலத்தில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜித் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
விஸ்கோன்ஸில் உள்ள சீக்கிய குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்னரே மஸ்ஜித் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிக்கும் இல்லறம் -12

இனிக்கும்இல்லறம்1
அவர் எவ்வளவு நல்ல கணவர்!
இல்லற வாழ்வு இனிமை அடைய நாம் யாரிடம் முன்மாதிரியை தேடுவது? என்பதை ஆராய்ந்தால் இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை தவிர எவரும் பூரணமான நபர் அல்லர் என்ற முடிவுக்குத்தான் நாம் வருவோம்.
எவராலும் எட்டிப்பிடிக்க இயலாத அளவுக்கு இறைவனின் இறுதித் தூதரின் நடவடிக்கைகளும், நற்குணங்களும் அமைந்திருந்தன என்பதை வரலாற்று ஏடுகளில் நம்மால் காண இயலும்.
மனைவியருடனும், குழந்தைகளுடனும் அவர்கள் நடந்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக பெருமை பேசுபவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதத்தில் அமைந்திருந்தது.
தனது தோழர்களுடன் நபியவர்கள் பழகிய விதமும் இதில் எவ்விதத்திலும் குறைந்து போகவில்லை. ஒவ்வொரு தோழரின் உள்ளத்தை தொடும் அளவுக்கு நபிகளாரின் நற்குணங்களும், பழகும் பாணிகளும் அமைந்திருந்தன. இதனால் தான் நபித் தோழர்கள் தங்களின் உயிரை விட மேலாக நபியவர்களை நேசித்தார்கள். அவர் கட்டளையிட்டால் கடலில் குதிக்கவும் தயாரானார்கள். உன்னதமான விழுமியங்களை உள்ளத்தில் சேகரித்து வைத்திருந்த நபி(ஸல்) அவர்கள் சிறந்த ஆசிரியராகவும், சிறப்பான வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்கள். வரலாற்றில் பதிவுச் செய்யப்பட்ட ஆளுமைகளை விட மிக உயர்ந்த இடம் நபிகளாருக்கு உண்டு.

Dua For Gaza