அங்காரா:ரோஹிங்கியா முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு பலிகடாக்களாக மாறியுள்ள சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப்பூர்வ தலையீட்டைக் கோரி துருக்கி நாட்டு தலைவர்கள் மியான்மர் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவும், பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனாவும் நேற்று முன்தினம் மியான்மருக்கு புறப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சனைக்கு தீர்வு காண துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் தாவூத் ஓக்லு, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின்(ஒ.ஐ.சி) தலைவர் இக்மலுத்தீன் இஹ்ஸானுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் மியான்மரில் துருக்கி தூதரகம் திறக்கப்பட்டிருந்தது. துருக்கி தூதர் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயர் துடைப்பு முகாமிற்கு சென்று பார்வையிட்டதாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment