வரலாற்றில் ஏராளமான போர்களும், இனப்படுகொலைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் துவக்கி வைத்த இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்தன.போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளின் பின்னணியில் மதம், தீவிர தேசியவாதம், இன வெறி, ஏகாதிபத்தியம் ஆகியன இருந்துள்ளதை நாமறிவோம்.
Monday, July 21, 2014
காஸ்ஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!
தோஹா: இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரரீதியா கவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Saturday, July 19, 2014
உலகில் 3 இல் ஒரு பகுதி ஏழைகள் இந்தியாவில்!
புதுடெல்லி : உலகில் மூன்றில் ஒரு பங்கு பரம ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஐ.நா. 2014ஆம் ஆண்டின் “மில்லினியம் வளர்ச்சி இலக்குகள்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஐ.நா. தகவல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஐ.நா. அமைப்பின் ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
Thursday, July 3, 2014
சீனாவில் நோன்பு நோற்கத் தடை
பெய்ஜிங் : சீனாவில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதைச் சீன அரசு தடை செய்துள்ளது.
சீனாவில் முஸ்லிம்கள் வசிக்கும் வடமேற்கு பிராந்திய ஸிங்ஜியாங் பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் இணைய தளங்கள் மூலமும் அரசு முகாமைகள் மூலமும் இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரமலானில் உள்ளத்தை புதுப்பிப்போம்!
நம்பிக்கையாளர்களுக்கு ஆத்ம பரிசோதனைக்கும், சுய விமர்சனத்திற்குமான அபூர்வமான வாய்ப்பே ரமலான்.சுய விசாரணைகள் நம்பிக்கையாளரை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்.வழி கேட்டிலிருந்து நேர்வழியை நோக்கியும், நேரான வழியில் மேலும் உறுதியுடன் செயல்படவும் ரமலான் மனிதனை வழி நடத்துகிறது.ஒரு நம்பிக்கையாளனின் வாழ்க்கை என்பது சுவனத்தை நோக்கிய பயணமாகும்.மறுமையில் விசாரணை வரும் முன்னர் அடிக்கடி தன்னை சுயமாக விசாரித்துக்கொள்ளவும், தனது செயல்களை நீதியின் தராசில் சீராக தூக்கிப்பார்த்து சரிச்செய்து கொள்ளவும் கற்பிக்கப்பட்ட சமூகமே முஸ்லிம்கள்.இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர்(ரலி) அவர்களின் பிரபலமான கூற்று இங்கு கவனிக்கத்தக்கது:’நீங்கள் விசாரிக்கப்படும் முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்.நீங்கள் கணிப்பிட்டுப் பார்க்கப்படும் முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்’. அருட்கொடைகளின் வசந்தகாலமான ரமலானில் நம்பிக்கையாளர்களின் விசாரணை பெரும்பாலும் தன்னைக் குறித்தே அமையும்.
Friday, June 20, 2014
ஏர்வாடிதர்ஹாவில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை
எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறியதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அலங்கார வாயில் அருகே பல ஆண்டுகாலமாக சாலையோர வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும்,போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இவர்களது கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
லேபிள்கள்:
SDPI,
இராமநாதபுரம்
பாஜக அரசு இரயில் கட்டணத்தை உயர்த்தியது மக்கள் விரோத செயல்! எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கூறியதாவது,
புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்கள் பெரிதும் உபயோகிக்கும் இரயிலின் பயணக் கட்டணத்தை 14.2 சதவீதம் அளவிற்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மேலும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவாலயங்கள் மீது கல்வீச்சு:- எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கண்டனம்!
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஸ் குமார் கடந்த 18.06.2014 அன்று இரவு 10:30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழி எங்கும் அதன் தொண்டர்கள் பேருந்துகள் மீதும், தொழில் நிருவனங்கள் மீதும் கற்களை எரிந்து பதட்டத்தை ஏற்படுத்தினர்.
மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், தேவாலய ஊழியர்களின் வாகனங்கள் மீதும் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர்.
வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசுக்கு வேண்டுகோள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 18.06.14 அன்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் K.P.S.சுரேஷ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து விரைந்து தேடி வரும் நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள், கிருஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டும். கடைகள் உடைக்கப்பட்டு பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. வழியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி கீழ்த்தரமாக நடந்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லேபிள்கள்:
PFI,
தமிழகம்,
ஹிந்துத்துவா
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி இலங்கை தூதரகத்தில் கூட்டமைப்பு சார்பில் மனு
இலங்கையில் கடந்த காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற வன்முறையில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் பளிவாசல்களும், வீடுகளும், தொழில் நிறுவனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
லேபிள்கள்:
PFI,
SDPI,
இஸ்லாமிய கூட்டமைப்பு,
தமிழகம்








.jpg)