Friday, June 20, 2014

தேவாலயங்கள் மீது கல்வீச்சு:- எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கண்டனம்!


இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஸ் குமார் கடந்த 18.06.2014 அன்று இரவு 10:30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழி எங்கும் அதன் தொண்டர்கள் பேருந்துகள் மீதும், தொழில் நிருவனங்கள் மீதும் கற்களை எரிந்து பதட்டத்தை ஏற்படுத்தினர்.

மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், தேவாலய ஊழியர்களின் வாகனங்கள் மீதும் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதனை கண்டித்து பேராயர் சற்குணம் தலைமையில் சென்னை அமிஞ்சக்கரையில் இன்று 20.06.2014 ஒருநாள் அடையாள உண்ணா விரதம் நடைபெற்றது. 

இதில் எஸ்.டி.பி. ஐ கட்சின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.மேலும் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza