Friday, June 20, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி இலங்கை தூதரகத்தில் கூட்டமைப்பு சார்பில் மனு

islamiya koottamaippu
இலங்கையில் கடந்த காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற வன்முறையில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் பளிவாசல்களும், வீடுகளும், தொழில் நிறுவனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்த வன்முறைக்கு காரணம் இலங்கை அரசின் ஆதரவோடு செயல்படும் பொது பல சேனா என்ற அமைப்பாகும்.
இத்தகைய வன்முறைகளை இலங்கை அரசு தடுத்து நிறத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு நேற்று(18.06.2014) தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பிலும் மனு கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இலங்கை தூதரகத்திற்கு நேரில் சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார்கள்.அந்த மனுவில்…
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அனைத்து சமூக மக்களுக்கும் சம உரிமையும், நீதியையும் பெற்று தர போராடும் அரசியல் பேரியக்கமாகும்.
கடந்த 15 ம் தேதி நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இந்திய மக்களிடத்தில் மனவேதனையை ஏற்படுதியுள்ளத்தை உணர முடிகிறது. இந்த வன்முறை தாக்குதலில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு, 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.இதற்கு காரணம் பொது பல சேனா என்ற சிங்கள புத்த மதத்தை சேர்ந்த அமைப்பாகும்.
இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள்ளது என பல்வேறு தரப்பிலும் அறிக்கை தரப்பட்டுள்ளது.எனவே இது தமிழ் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இது திட்டமிட்ட இனவெறி தாக்குதலாகும்.இந்த வன்முறை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அமைதியாக வாழும் மக்களிடத்தில் பயத்தை அதிகரிக்க செய்துள்ளது.
தற்போது நடைபெறும் வன்முறை, இலங்கையில் 2008 ல் நடைபெற்ற இனப்படுகொலையில் 1,50000 க்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதை போன்ற ஒத்த குனமுடையதாக உள்ளது.
எனவே, இலங்கை உயர் அதிகாரிகள் குழு இதுபோன்ற இனப்படுகொலைகள், மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டும். மேலும் இந்த வன்முறைக்கு காரணமான பொது பல சேனா அமைப்பின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சின் மாநில தலைவர் அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கும் மின் அஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

 sdpi given letter to srilankan embassy
sdpi given letter to sri lankan embassy


letter for srilanka issue
sdpi given letter to human rights commission
letter first page
sdpi given letter to prime minister
letter second page

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza