திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 18.06.14 அன்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் K.P.S.சுரேஷ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து விரைந்து தேடி வரும் நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள், கிருஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டும். கடைகள் உடைக்கப்பட்டு பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. வழியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி கீழ்த்தரமாக நடந்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடர்ந்து சங்பரிவார் இயக்கங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, பொது மேடைகளில் வகுப்புவாதங்களை தூண்டும் விதமான பேச்சுக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்கள் மீதான தாக்குதல்களையும் நடத்திவருகிறார்கள். இவ்வாறு வன்முறையை தூண்டுபவர்கள் மீது தமிழக அரசு நேரடியாக தலையிட்டு வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
ஏ.எஸ். இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
0 கருத்துரைகள்:
Post a Comment