அண்மையில் டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இறந்தார். அதே போல் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்ப்பு மாணவி புனிதா பலாத்காரம் செய்ய முயற்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க கோரியும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டங்களை நடத்தியது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் பணபலம் மற்றும் அதிகார குறுக்கீடுகளால் பாலியல் பலாத்கார சம்பவங்களில் வழக்கு பதிவு செய்ய்யப்படாமலும் முறையாக விசாரணை செய்ய்ப்படாமலும் குற்றவாளிகள் தப்புவதை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்தது.





