கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிப்பவர் ஈஸ்வரப்பா. இவர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டுள்ளது.முதல்வர் கவனிக்கும் துறைகளான வருவாய், கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் ஆகிய துறைகளை துணை முதல்வர் பதவிவகித்து வரும் ஈஸ்வரப்பா கவனித்து வருகிறார். இவர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டதின் அடிப்படையில் பெங்களூரிலும், ஷிலோவிலும் உள்ள ஈஸ்வரப்பாவிற்கு சொந்தமான 7 இடங்களில் லோக் ஆயுக்தா போலீஸ் திடீரென்று சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 1 கிலோவிற்கு மேல் தங்கம், 37 கிலோ வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இது மாநில பா.ஜ.கவிற்கு பெருத்த அவமானத்தை பெற்றுத்தந்துள்ளது.
இதனையடுத்து துணை முதல்வர் பதவியை ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எழுந்து வந்த கோரிக்கையை முதல்வர் நிராகரித்துள்ளார்.
நாட்டை கொள்ளையடித்தும், ஊழலில் சிறந்து விளங்கி வரும் பா.ஜ.க காங்கிரஸிற்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. உட்கட்சி பூசல் நிறைந்த கர்நாடக பா.ஜ.கவால் அம்மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டு வரும் வேளையில் நாடு இவர்களின் கைக்கு சென்றால் கர்நாடகத்தின் நிலை குஜராத் போன்று சுடுகாடாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது
0 கருத்துரைகள்:
Post a Comment