Thursday, January 3, 2013

“இந்தியாவில் 40 நிமிடத்துக்கு ஒரு பெண் வன்புணர்ச்சி: அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: , இந்தியாவில் 40 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். இதில் பெரும்பாலான சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்படுவதே இல்லை. வன்கொடுமை சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட பிறகுதான், நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனாலும் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதில்லை. என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி புரோமிளா சங்கர் தெரிவித்துள்ளார்.


ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி புரோமிளா சங்கர் தாக்கல் செய்திருந்த பொது நலன் வழக்கில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆண் காவல் அதிகாரிகளும், ஆண் நீதிபதிகளும் விசாரிப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனவே, பெண் காவல் அதிகாரிகளும், பெண் நீதிபதிகளும் மட்டுமே பலாத்கார வழக்குகளை விசாரிக்க வேண்டும்.


மேலும் வன்புணர்வு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தற்காலிக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக கருதி இன்று விசாரிக்க  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முடிவு செய்துள்ளது.

Source: inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza