Saturday, September 7, 2013

ரிஹாபின் எம்.எஸ்.டபிள்யூ கல்வி உதவித்தொகை திட்டத்தின் 2-வது கட்டம் துவக்கம்!



புதுடெல்லி : ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் என்ற அரசு சாரா அமைப்பு சமூக சேவை துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக மாஸ்டர் ஆஃப் சோசியல் வர்க் என்ற பட்ட மேற்படிப்பை பயில கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் 2-வது கட்டத்தை ரிஹாபின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில் கூறியது :

ரிஹாபின் திட்டங்கள் அமல்படுத்தும் கிராமங்களைச் சார்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் சமூக சேவையில் பங்குபெறச் செய்வதற்கான ஒரு முன்னேற்றமான திட்டம் இது. ஒரு சமூக சேவகரின் ஈடுபாடு, அர்ப்பணத்தை ஒவ்வொரு மாணவரும் தனது படிப்புக் காலத்தில் பேணவேண்டும். சமூக சேவையில் ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கினை நிறைவேற்றவேண்டும். இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்தார்.


இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் பொதுச் செயலாளர் அப்ஸல் விவரித்தார். எம்.எஸ்.டபிள்யூ ப்ரோக்ராம் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஜாபிர், டெல்லி பல்கலைக்கழக ரிசர்ச் ஸ்காலர் அமானுல்லாஹ் கான் ஆகியோரும் உரையாற்றினர்.

Info : popularfronttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza