பி. சி. ராய் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் உரிய மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளிக்கத் தவறி விட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் குழந்தைகள், மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களால் ஏதும் செய்திருக்க முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு இரண்டு நாட்களில் 18 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் இறந்து போனதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் விசாரணையில் அலட்சியப் போக்கு இருப்பதாக கண்டறியப்படவில்லை.
சுகாதாரப் பிரச்னைகள் காரணமாகவும், உரிய மருத்துவ வசதி இல்லாத காரணங்களால் இந்தியாவில் தினமும் சுமார் 5 ஆயிரம் குழந்தைகள் இறந்து போவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
-thoothu online.com

0 கருத்துரைகள்:
Post a Comment