Wednesday, August 21, 2013

‘எகிப்து ராணுவப் புரட்சியின் பின்னணியில் இஸ்ரேல்’: துருக்கி பிரதமர் எர்டோகன்!



எகிப்தில் அதிபர் முஹம்மது முர்ஸியை ராணுவம் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றியதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக துருக்கியின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஃவானுல் முஸ்லிமீன் தேர்தலில் வெற்றிப் பெற்றால் கூட அவர்களை ஆட்சியில் தொடர இஸ்ரேல் அனுமதிக்காது என்று யூத அறிஞர் ஒருவர் பிரான்சில் வைத்து தன்னிடம் கூறியதாக எர்டோகன் ஏ.கே.கட்சியின் தலைவர்களிடையே உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

‘எகிப்தில் ராணுவ அரசுடனான மேற்கத்திய நாடுகளின் கொள்கை கண்டிக்கத்தக்கது. சர்வாதிகாரிகளை காண யாரும் விரும்பினால் அவர்கள் எகிப்தை பார்க்கட்டும் என்று எர்துகான் தெரிவித்தார்.
எகிப்திய ராணுவத்திற்கு பொருளாதார உதவியை வழங்கும் வளைகுடா நாடுகளை விமர்சித்தார் எர்டோகன். இத்தகைய நாடுகள் ஏன் இதர ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவவில்லை என்று எர்டோகன் கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் உலகில் பெரும் பணக்கார நாடுகள் இருப்பதைப் போலவே பொருளாதார உதவியை வேண்டி நிற்கும் ஏழை நாடுகளும் உள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசத்தால், பணக்கார முஸ்லிம் நாடுகள் சர்வாதிகாரிகளை ஆதரிக்கின்றன என்று எர்டோகன் கூறியுள்ளார்.
எகிப்தில் ராணுவ புரட்சியின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஏற்கனவே வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மத்யூரா குற்றம் சாட்டியிருந்தார்.
Source: New india.tv/tn

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza