சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த அக்டோபர்-2 முதல் 15 தினங்களாக தீவிர தொடர்பிரச்சாரங்கள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று சென்னையில் தலைமைச் செயலகமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும் என்று SDPI மாநில தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி முற்றுகை போராட்டம் தமிழகம் முழுவதும் மிக்க எழுச்சியுடன் நடைபெற்றது.
சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட SDPI தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமையில் கிளம்பிய SDPIயினரை ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையினர் தடுத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை தாம்பரத்தில் மாவட்ட தலைவர் பிலால் தலைமையில் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.இதே போன்று கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் SDPI மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக்கும், இராமநாதபுரத்தில் மாநில பொது செயலாளர் ரஃபிக்கும்,கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இதே போன்று திருச்சி,நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மதுவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யபட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.







0 கருத்துரைகள்:
Post a Comment