Wednesday, October 17, 2012

305 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து சுதந்திர நாடு ஆகிறது: வாக்கெடுப்புக்கு இங்கிலாந்து சம்மதம்


கடந்த 1707-ம் ஆண்டு இங்கிலாந்துடன் பக்கத்து நாடான ஸ்காட்லாந்து இணைந்தது. பின்னர் வேல்ஸ் இணைந்ததை தொடர்ந்து அது கிரேட் பிரிட்டன் ஆக உருவானது. 

வடக்கு அயர்லாந்தையும் உள்ளடக்கி தற்போது ஐக்கிய பேரரசு (யுனைடெட் கிங்டம்) ஆனது. கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமாக திகழும் ஸ்காட்லாந்தில் 50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2011-ம் ஆண்டு சல்மோன்ட் தலைமையிலான ஸ்காட்லாந்து தேசிய கட்சி (எஸ்.என்.பி.) ஆட்சி பொறுப்பேற்றது. அதில் இருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகிறது. 

ஆனால் அதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரும்பவில்லை. இருந்தாலும் இப்பிரச்சினை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 

இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு வருகிற 2014-ம் ஆண்டு சுதந்திரம் வழங்குவது என முடிவு செய்து அதற்கு இங்கிலாந்து சம்மதித்துள்ளது. அதற்கு முன்னதாக பொதுமக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

வாக்கெடுப்பில் பிரிய ஆதரவு கிடைத்தால் 305 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து சுதந்திர நாடாக மலரும். அதேவேளையில் இங்கிலாந்துடன் உள்ள உறவு முறியும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza