ஜெனிவா:இந்த ஆண்டிற்கான மருத்துவ ஆராய்ச்சிக்கான நோபல் பரிசுகள் பிரிட்டிஷ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரிட்டனைச் சோர்ந்த ஜான் கர்டன்(John Gurdon), ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனகா (Shinya Yamanaka) வும் மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெம் செல்களை உருவாக்கிய பணிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதன் மூலம், நோய்களை கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் புதிய வழியை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
நோபல் பரிசுத்தொகையான 8 மில்லியன் க்ரவுண்(crown) இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று நோபல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படும். அதன் பின்னர், அறிவியல், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் தொடர்ந்து அறிவிக்கப்படும்.

0 கருத்துரைகள்:
Post a Comment