Tuesday, October 16, 2012

மீனில் விஷம்: அதிர்ச்சி தகவல்!


நாம் விரும்பி உண்ணும் மீனில் வைட்டமின் எக்ஸ் இருக்குமா?  வைட்டமின் ஒய்  இருக்குமா? என்றெல்லாம் நாம் கணக்கிட்டு கொண்டிருக்க, உங்கள் மீனில் வண்டி வண்டியாக  DDT எனப்படும் பூச்சிகொல்லி மருந்தும், என்டோசல்பானும் இருக்கிறது என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும்? 

சொல்லியிருப்பது, கேரளா மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் ஊக்கத்தில் பல்வேறு வகையான மீன்களில் ஆராய்ச்சி செய்த சலீம் அலி சென்டர் பார் ஆர்னிதாலாஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்டரி (SACON) என்ற அமைப்பு. இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

கேரளாவில் பாயும் நதிகளில் பூச்சிகொல்லி மற்றும் தீங்கு விளைவிக்கும் விஷங்கள் பற்றி ஆய்வு செய்ய  இந்த அமைப்பை கேரளா பயோ டைவர்சிடி போர்டு சமீபத்தில் அங்கீகாரம் அளித்து நியமித்தது. பாலக்காடில் பாயும் சித்துர்புழா என்ற ஒரு சிறு ஆற்றைத் தவிர ஏனைய 44 நதிகளையும் இந்த SACON அமைப்பு ஆய்வு செய்தது.

மிகவும் அதிர்ச்சிக்குரிய கண்டுபிடிப்பாக, ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 159 மீன்களில் அனைத்திலும் DDT எனப்படும் பூச்சிகொல்லி மருந்தும், என்டோசல்பான் எனப்படும் நச்சு பொருளும் கலந்துள்ளது தெரிய வந்தது.

சமீபத்தில் என்டோசல்ஃபான் உற்பத்திக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரண்டதும் இந்தியா அதற்கு ஆதரவு அளித்ததும் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குக் கொட்டு வைத்ததும் மத்திய அரசு என்டோசல்பான் உற்பத்தியாளர்களுக்கு வக்காலத்து வாங்கி நீதிமன்றத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza