ராஞ்சி: ‘சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளும், மக்களை சுரண்டுதலுமே நக்ஸலிசம் அதிகரிக்க காரணம்’ என்று ராஞ்சியில் நடைபெற்ற மக்கள் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில்; “1990ம் ஆண்டுக்கு முன்பாக நாட்டில் தீவிரவாதம் மற்றும் நக்ஸலிசத்தால் 50 மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் இன்று அது 270 மாவட்டங்களுக்கு பரவி இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
மக்களை சுரண்டுதல், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் முறையற்ற ஆட்சி நிர்வாகம் ஆகியவையே நக்ஸல் குழுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள். வன உரிமைகள் மற்றும் நீர்-நில பிரச்சினைகளில் உரிமைகள் மறுக்கப்பட்டு சமத்துவமின்மை நிலவுவதால் நக்ஸலிசம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை நாம் வெகு விரைவிலேயே பார்க்கப் போகிறோம்.
ஒரு ஏழை ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸை பெற எவ்வளவு நேரம் ஆகிறது? ஆனால் ஒரு வசதியானவர் சாப்பிடுவதற்கு பீஸா போன்ற திண்பண்டங்கள் 30 நிமிடங்களுக்குள் உடனே கிடைக்கின்றன. இதற்கிடையே உள்ள வித்தியாசத்தை நாம் உணரவேண்டும்.” என்று கூறினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment