கண்களில் லென்ஸ் போட்டு வேலை செய்பவரா நீங்கள் இதை படிங்க முதல்ல....
பார்வை குறைபாடுள்ளவர்கள் லென்ஸ் அணிந்து வந்த நிலை மாறி தற்போது மக்கள் மத்தியில் கான்டக்ட் லென்ஸ் ஒரு புதிய ஸ்டைலாக மாறிவிட்டது.
பெரும்பாலும் கணினியில் தொடர்ந்து வேலை செய்பவர்களும், அழகான தோற்றத்துக்காகவும் வண்ண நிற கான்டக்ட் லென்ஸினை பலர் பயன்படுத்துகின்றனர். இதுவும் ஆபத்து தான். தினமும் லென்சை பயன்படுத்துவதால் பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நம் கண்ணுக்கு தெரியாத நுண்ணிய ஒட்டுண்ணிகள், பாக்டீரியாகள் போன்ற கிருமிகள் லென்சை கொஞ்சம் கொஞ்சமாக தாக்குகின்றன. எனவே நாளடைவில் லென்ஸின் வழியாக ஊடுருவி கண்களின் விழித்திரையை பாதிப்படைய செய்கின்றது. பின் கண்பார்வை குறையும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே நாம் லென்சை பயன்படுத்துவதற்கு முன் கண் மருத்துவரிடம் நன்கு ஆலோசித்து பின் பயன்படுத்தலாம். நம் கண்களுக்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே அணிய வேண்டும் இல்லையெனில் கண்களில் நீர் வடிதல், பார்வை மங்குதல், வலி ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கின்றது.
source: dinamani.com


0 கருத்துரைகள்:
Post a Comment