Friday, October 5, 2012

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் 2012ல் இந்திய குழந்தைகள் என்ற தலைப்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:

முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2011ல் இந்திய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன. குழந்தை கடத்தல் விவகாரம் 43 சதவீதமும், கற்பழிப்பு வழக்குகள் 30 சதவீதமும் உயர்ந்துள்ளன. 2011ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக 33,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 6406 வழக்குகள் கூடுதலாகி உள்ளன.


இதில் முதல் இடம் பிடித்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிராக 16.6 சதவீத குற்றங்கள் பதிவாகி உள்ளன. மத்திய பிரதேசத்தில் 13.2 சதவீதமும், டெல்லியில் 12.8 சதவீதமும், மராட்டிய மாநிலத்தில் 10.2 சதவீதமும், பீகாரில் 6.7 சதவீதமும், ஆந்திராவில் 6.7 சதவீதமும் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக பெண்களை வாங்குவதில் மராட்டிய மாநிலம் 74 சதவீத வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தான் பெண்களை விற்கும் குற்றம் 77 சதவீதம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்கள் குழந்தை கடத்தலில் 43 சதவீதங்களுடன் முக்கிய இடம் வகிக்கிறது. 44.5 சதவீத கற்பழிப்பு வழக்குகள் மராட்டியம் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் பதிவாகி உள்ளது. சிசு கொலை 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

இவற்றில் மராட்டியம், சட்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் 56 சதவீத சிசு கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 18 வயதுக்கு குறைவான பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதில் 298 வழக்குகள் பதிவாகி மேற்கு வங்க மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. இதன் அடுத்த இடங்களில் பீகார், அசாம், ஆந்திரா மாநிலங்கள் உள்ளன. கற்பழிப்பு சம்பவங்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 23.6 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் உத்திர பிரதேசம், மராட்டியம் மாநிலங்கள் உள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் 2009ம் ஆண்டில் 2.3 சதவீதம். 2011ம் ஆண்டில் அதிகரித்த குற்ற புள்ளி விவரம் 2.7 சதவீதம். டெல்லியில் 25.4 சதவீதமும், அந்தமான் நிகோபார் தீவுகளில் 20.3 சதவீதமும், சண்டிகரில் 7 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 6 சதவீதமும், கோவாவில் 5.1 சதவீதமும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza