நாகர்கோவில்: தமிழகத்தில் தற்போது தினமும் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மின் உற்பத்தியில் சந்திக்கும் சவால்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம்:
நீர், எரிபொருள், போக்குவரத்து மற்றும் சாலை, ரயில் வழித்தட இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் சிரமங்கள்.
மின் உற்பத்தி திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு.
ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்து நிலக் கரியை எடுத்து வருவதில் ஏற்படும் சவால்கள்.
மின்சார மற்றும் இயந்திர உபகரணங்களை உரிய நேரத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஏற்படும் தாமதம்.
கட்டுமான பணிகளில் ஏற்படும் தாமதம். மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதிலும், வினியோகிப்பதிலும் ஏற்படும் சிக்கல்கள்.
மொத்தத்தில் திட்டங்களை செயல்படுத்த வசதி செய்வதற்கு 2 ஆண்டுகளும், திட்டங்களை உருவாக்க 5 ஆண்டுகளும் என்று மொத்தம் 7 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும் .
மலிவான விலையில் தரமான, தடையில்லா மின்சாரம் வழங்குவதே எங்கள் லட்சியம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மின் நிலையங்களின் பணிகளுக்கு ஏற்ற திறமையுள்ள பணியாளர்கள் பற்றாக்குறையும், போதிய திறமையான பணியாளர்கள் இல்லை என்பதும் ஒரு காரணம்’ என்று, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
source: dinakaran

0 கருத்துரைகள்:
Post a Comment