லண்டன் : சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் 2050ம் ஆண்டு வாக்கில் முறையாக திருமணம் செய்த குடும்ப தலைவர்கள் - தலைவிகளின் எண்ணிக்கை குறைந்து அவர்கள் மைனாரிட்டியாக மாறி விடுவர் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
சமூக படிப்புகளுக்கான மையம் எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் தான் இம்முடிவு வெளி வந்துள்ளது. அதிக வருமானம் உள்ளவர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்வதாகவும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதாகவும் அச்சர்வேயில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால் குடும்ப அமைப்பு இங்கிலாந்தில் சீர் குலைந்து உள்ளதாக கவலை தெரிவித்துள்ள அவ்வமைப்பு கேமரூன் ப்ரவுன் தலைமையிலான அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இதில் ஏற்படும் குறைபாடுகள் இங்கிலாந்து பிற துறைகளில் காணும் வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்றும் எச்சரித்துள்ளது.


0 கருத்துரைகள்:
Post a Comment