Tuesday, October 9, 2012

அதிக நேரம் டிவி பார்த்தால் தாக்கும் நீரிழிவு!


தொலைக்காட்சியை அதிக நேரம் பார்பவரா நீங்கள்? அப்படியானால் இதை படியுங்கள். 4 மணி நேரம் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தால் நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிலும் நீங்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்களாக இருப்பின் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்ப்பதால் இரண்டாவது வகை எனப்படும் நீரிழிவு நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்க்கும் நபர்களுக்கு, உடல் அசைவின்மை காரணமாக பல நோய்கள் ஒரே சமயத்தில் தாக்கக்கூடும் என குயின்ஸ்லேன்ட் பல்கலைக்கழத்தை சேர்ந்த பால் கார்டினர் என்ற மருத்துவர் கூறுகிறார்.

பெரும்பாலும் இளம் பருவத்தினர் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பதினால் அவர்களின் நடத்தையில் பல மாற்றங்கள் காண முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தொலைக்காட்சியை அமர்ந்து பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் க்ரோனரி ஆர்டரி பாதிப்பு, பக்கவாதம் மற்றும் இரண்டாவது வகையான நீரிழிவு நோய் போன்ற நோய்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் தாக்கக்கூடும் என மருத்துவர்கள் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளன

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza