ஓஸ்லோ:நார்வேயில் 77 பேரை கொலைச்செய்த வலதுசாரி தீவிரவாதி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்கை நீதிமன்றத்தில் முதன் முறையாக நடந்த பகிரங்க விசாரணையில் ஆஜர்படுத்தினர். ப்ரெவிக்கின் வெறித்தனத்தால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும், துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியவர்களும், ஊடகவியலாளர்களும் திரண்டிருந்த நீதிமன்ற அறைக்கு வந்த ப்ரெவிக் மகிழ்ச்சியாக காணப்பட்டான் என பி.பி.சி கூறுகிறது. கடந்த ஜூலை 22-ஆம் தேதி நடந்த கூட்டுப்படுகொலைக்காக கைதுச்செய்யப்பட்ட ப்ரெவிக் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதற்கு முன்னர் போலீஸ் ப்ரெவிக்கை ரகசியமாக விசாரித்துவந்தது.
நீதிமன்றத்திற்கு வந்த ப்ரெவிக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் முன்னிலையில் ஏற்கனவே எழுதி வைத்திருந்த அறிக்கையை வாசிக்க முற்பட்டபொழுது நீதிபதி அதனை தடுத்துவிட்டார். கொலையை நடத்தியதாக ஒப்புக்கொண்ட ப்ரெவிக் அதற்கான குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். முஸ்லிம்களிடமிருந்தும், பன்முக சமூகத்திலிருந்தும் நார்வேயை காப்பாற்றுவதற்கு கொலை தேவையாக இருந்தது என மீண்டும் ப்ரெவிக் கூறினான்.
0 கருத்துரைகள்:
Post a Comment