ஜெருசலேம்:பாரிஸ் தலைமை அலுவலகத்தில் யுனெஸ்கோ ஃபலஸ்தீனை தனது புதிய உறுப்பினர்ராக இணைத்துக் கொண்டதன் விளைவாக, அதனை தண்டிக்கும் வகையாக இஸ்ரேல் ஃபலஸ்தீனுடைய $100 மில்லியன் வரி பணத்தை நவம்பர் 3 முதல் நிறுத்தி வைக்கப்பபோவதாகவும், சட்ட விரோதமாக ஆக்கிரமித்த பகுதிகளில் கட்டிடங்களை விரைவாக கட்டப் போவதாகவும், அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் அவர்களின் மந்திரி சபை அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளது என்று பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளது. இது ஃபலஸ்தீன் உறுப்பினராக அறிவிக்கப்பட்ட மறு தினத்தில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணம் ஒவ்வொரு மாதமும் இஸ்ரேலிய துறைமுகம் வழியாக ஃபலஸ்தீனுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது விதிக்கப்படும் சுங்க வரியாகும். இதன் மதிப்பு $60 மில்லின் ஆகும். இந்த நிதி பாலஸ்தீன அதிகார பட்ஜெட்டில் ஒரு பெரிய சதவீதம் வரை உருவாக்குகின்றன.
ஃபலஸ்தீனியர்களை பழிவாங்கும் கொள்கையை ஒருபோதும் கைவிடப்போவது இல்லை என்று அதன் அதிகாரி டெல் அவிவ் தெரிவித்தார். இவரின் இந்த நடவடிக்கையால் ஃபலஸ்தீனில் இதற்கு முன்பு இருந்த பொருளாதார நெருக்கடி அதிகமாக ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து மாதந்தோறும் $200 மில்லியன் தொகை ஃபலஸ்தீனிய குடும்பங்களின் தேவைக்கு வருவாயாகவும், நிதி உதவியாகவும் வழங்கப்படுகிறது, என்று செய்திகள் தெரிவிக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment