Tuesday, November 8, 2011

பெட்ரோல் விலை உயர்வு:மம்தா இன்று மன்மோகன்சிங்குடன் சந்திப்பு!

MAMTA_1_830207e
புதுடெல்லி:அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் தடாலடியாக அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல் விலையால சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெட்ரோல் விலையை உயர்த்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு பொதுமக்களின் நலனைக் குறித்து சற்றும் கவலைப்படாமல் அலட்சிய போக்கை கடைப்பிடித்துவருகிறது.

இதனால் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்நிலையில் டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பெட்ரோல் விலைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி இப்பிரச்சனையில் சமரசத்துக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் திங்கள் கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திரிணமூல் காங்கிரஸ் மக்கள் கட்சி. மக்களைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் கட்சி ஏற்றுக் கொள்ளாது. விலைவாசி உயர்வு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்தப் பிரச்னையில் எங்களது போராட்டம் தொடரும்.

அண்மையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை தொடர்பாக எங்கள் கட்சியின் மக்களவை (18), மாநிலங்களவையைச் (6) சேர்ந்த 24 எம்.பி.க்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுகின்றனர்.
அப்போது, எங்களது கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைப்போம். அவர் என்ன பதில் சொல்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள காத்திருக்கிறோம் என்று மம்தா தெரிவித்தார்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் பர்த்தோ சட்டர்ஜி தலைமையில் அந்தக் கட்சி எம்.பி.க்கள் கொல்கத்தாவில் இருந்து திங்கள்கிழமை தில்லி புறப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza