Wednesday, November 9, 2011

மோடியின் நடவடிக்கையால் குஜராத்திற்கு ஆபத்து

modi111111_f
அஹ்மதாபாத் : குஜராத் காந்தி பிறந்த மாநிலம் என்பதால் சுதந்திரம் அடைந்தது முதல் அரசுகளின் தனி கவனிப்பில் தற்போது உற்பத்தியில் சிறந்த மாநிலமாக உள்ளது. ஆனால் தற்போது குஜராத் முதல்வர் மோடி ஐந்து நாட்களுக்கு வாணிபம் மற்றும் அரசு முறை பயணமாக சீனா செல்வதை அடுத்து குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பதற்றத்தில் உள்ளனர். மோடியின் சீன ஆர்வம் குஜராத்தின் தொழில் துறையில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதே இதற்கு காரணமாகும்.

மோடி மருந்து தயாரிப்பு, ரசாயனம், மின்னியல் இயந்திரங்களை உருவாக்குதல் மற்றும் மின்மாற்றி உற்பத்தி ஆகிய தொழில்களை குஜராத்தில் தொடங்குமாறு சீனாவிற்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளார். குஜராத் இத்தொழிற்துறைகளில் சிறந்து விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோடி டெலிகாம் இயந்திரங்களை உறபத்தி செய்யும் தொழிற்ச் சாலைகளை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப் படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

மோடியின் இப்பயணம் குறித்து அவரின் தீவிர ரசிகரும் தொழில் ஜாம்பவானுமான ஒருவர் கூறியதாவது ” சீனா குஜராத் வியாபாரத்தில் நுழைந்தால் சலுகைகளையும் உதவிகளையும் செய்து குஜராத் சந்தையை கைப்பற்றிவிடும் என்று கூறியுள்ளார். மேலும் மலிவான மற்றும் தரம் குறைந்த பொருட்களை சீனா சந்தையில் கொட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோடி பெரிய தொழிற் நிறுவனங்களுக்காக சிறிய மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களை வதைக்கிறார் என்ற குற்றசாற்று பலராலும் சொல்லப்பட்டு வருவது இந்நேரத்தில் நினைவுக் கூறத்தக்கது.

மேலும் இன்னொரு தொழிலதிபர் கூறியுள்ளதாவது ” டாட்டா போன்ற பெரிய நிறுவனத்திற்கு இடம் அளித்ததை தங்களால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் ஆனால் குஜராத்தின் தொழிற்துறை தற்போது கஷ்டத்தில் இருக்கும் போது சீனாவில் இருந்து தொழிலார்களை அழைப்பது சரியானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடியின் 20 பேர் கொண்ட உறுப்பினர் குழுவும் சீன அரசு அதிகாரிகளையும் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களை பெய்ஜிங்கிலும் ஷாங்கையிலும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் சீனாவின் அதிக திறன் கொண்ட மின்மாற்றியை குஜராத்தில் உற்பத்தி செய்ய ஏற்கனவே குஜராத் அரசிடம் ஒப்பந்தம் போட்டு 2500 கோடி செலவில் தொழிற்சாலைகள் அமைக்க பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஹோவெய் ஈனும் டெலிகாம் இயந்திர உற்பத்தி நிறுவனமும் குஜராத்தில் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவித்தள்ளது என்றும் மோடி இந்நிறுவனத்தை பார்வையிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza