Tuesday, November 8, 2011

போர்களை நிறுத்தவேண்டும்-வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை

occupy-wall-street-protests-2011
வாஷிங்டன்:பல்வேறு நாடுகளில் அமெரிக்கா நடத்திக்கொண்டிருக்கும் போர்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். நியூயார்க்கில் ஃபோலி சதுக்கத்தில் அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.

சட்ட-ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை நியூயார்க் போலீஸ் கைதுச்செய்துள்ளது. ’பேங்க் ட்ரான்ஸ்ஃபேர்ஸ் டே’ என அறிவிக்கப்பட்டிருந்த சனிக்கிழமை போர் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

இலாபத்தில் இயங்கும் வங்கிகளின் நிதிகளை நஷ்டத்தில் இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு சனிக்கிழமைக்குள் மாற்றவேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். போர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளும், ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்களையும் ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது. வாத்திய மேளங்கள் முழங்க நடைபெற்ற இப்பேரணியில் குழந்தைகளும், பெண்களும் பங்கேற்றனர். வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்களின் மையப்பகுதியான ஜுக்கோட்டி பூங்காவில் இருந்து பேரணி துவங்கியது.

அதிபர் பாரக் ஒபாமா வங்கிகளுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றிற்கு பாதுகாப்பு பதவி வழங்கியுள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினர். நாட்டில் அதிகரித்துவரும் பொருளாதார சமத்துவமின்மை, ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் மக்கள் வீதிகளில் இறங்கி போராட த்துவங்கினர். ஏராளமானோர் கைதுச்செய்யப்பட்டபோதிலும் மக்கள் ஆதரவு தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza