மாஸ்கோ:ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்திற்கு உதவி அளித்ததாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்யாவின் அணுவிஞ்ஞானி அணுசக்தி துறைக்கு சம்பந்தம் இல்லாதவர் என ரஷ்ய பத்திரிகை உறுதிச்செய்துள்ளது.
ரஷ்யாவைச் சார்ந்த முன்னாள் அணு விஞ்ஞானி ஒருவர் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் உபகரணத்தை தயாரித்து அளித்தார் என அணு சக்தி ஏஜன்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், இதுத்தொடர்பாக ரஷ்யாவின் நாளிதழான கொம்மர்ஸாண்ட் நடத்திய ஆய்வில் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஞ்ஞானி வைரத் துறையில் பணியாற்றும் நிபுணர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கையில் ரஷ்ய விஞ்ஞானியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், வியாஸ்லவ் டேனிலெங்கோ(Vyacheslav Danilenko) என்பவர்தாம் அந்த நபர் என்பதை ரஷ்ய பத்திரிகை கண்டறிந்துள்ளது.
டேனிலெங்கோ ஈரானில் பணிபுரிந்திருந்தாலும் அது வைரத்துறையில் என அப்பத்திரிகை கூறுகிறது. சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் அறிக்கையில் ஈரானின் அணு சக்தி திட்டத்திற்கு உதவிய ரஷ்ய விஞ்ஞானி தனது சொந்த நாட்டின் அணுசக்தி துறையில் நீண்டகால பணியாற்றியவர் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டும் தவறானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment