வாஷிங்டன்:ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை எதிர்பாராத விளைவுகளை(unintended consequences) ஏற்படுத்தும் என அமெரிக்க பாதுகாப்பு துறை தலைவர் லியோன் பெனட்டா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் மீது நடத்தும் தாக்குதலால் கூடிப்போனால் 3 ஆண்டுகள் மட்டுமே அந்நாட்டின் அணுசக்தி திட்டத்தை தாமதப்படுத்த இயலும். ஈரானின் மீதான தாக்குதல் பெரும் எதிர் விளைவுகளுக்கு காரணமாகும் என பெனட்டா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளன என்பது குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் பெனட்டாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அணுசக்தி திட்டத்தின் மூலம் ஈரான் எதனை நோக்கமாக கொண்டுள்ளது? அதனை தடுக்க தாக்குதல் நடத்துவது சரியல்ல! பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க ராணுவத்திற்கு இத்தாக்குதல் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும். விரிவான விவாதத்திற்கு பிறகே இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க இயலும். ஆனால், பொருளாதார-தூதரக நிர்பந்தத்தை அதிகரிக்க ஈரானுக்கு எதிரான தடையை தான் ஆதரிப்பதாக பெனட்டா தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment