சென்னை:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலவர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் விடுதலைக்காக தி.மு.கவின் மாநிலங்களை உறுப்பினரான வசந்தி ஸ்டான்லி நடத்திய சிறப்பு பூஜைகள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
வசந்தி ஸ்டான்லி நடத்திய பூஜைகள் அவரது தனிப்பட்ட விருப்பம் எனவும், அதற்கு கட்சி அனுமதி வழங்கவில்லை எனவும் தி.மு.கவின் அமைப்பு செயலாளர் டி.கெ.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில்தான் ஸ்டான்லி சிறப்பு பூஜை நடத்தினார். கடவுள் மறுப்புக் கொள்கையை கடைப்பிடித்து வருவதாக கூறும் தி.மு.க தலைவர்களில் சிலர் இதற்கு முன்பு மத சடங்குகளை நடத்தியபொழுது அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி கண்டித்திருந்தார். ஆனால், கருணாநிதி அணியும் மஞ்சள் துண்டு மற்றும் அவரது குடும்பத்தினரின் சிலரின் மத நம்பிக்கை குறித்து முன்னரே சர்ச்சை கிளம்பியதுண்டு. இச்சூழலில் வசந்தி ஸ்டான்லியின் கோயில் பூஜை குறித்த சர்ச்சையும் சில நாட்கள் நீடிக்கும்.
0 கருத்துரைகள்:
Post a Comment