புதுடெல்லி:மனித உரிமை ஆர்வலரை கடத்திச்சென்று கொலைச்செய்த வழக்கில் நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
1995-ஆம் ஆண்டு மனித உரிமை ஆர்வலரான ஜஸ்வந்த்சிங் பல்ராவை போலீஸ் அதிகாரிகளான குற்றவாளிகள் கடத்திச்சென்று கொலைச்செய்தார்கள் என்பது வழக்காகும். குற்றவாளிகளின் தண்டனையை உறுதிச்செய்த உச்சநீதிமன்றம் போலீஸாரின் போலி என்கவுண்டர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. போலீஸாரின் இத்தகைய அக்கிரமங்கள் சட்ட கட்டமைப்பை தகர்த்துவிடும் என நீதிமன்றம் தெரிவித்தது.குடிமகனுக்கு அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை மறுக்கும் செயலை போலீஸ் நடத்திவருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment