ரியாத் : சவுதியின் பிரபலமான தொலைகாட்சி சேனல் ஒன்று ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொலைகாட்சி பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்கள் அளித்துள்ளனர் என்று கடந்த செவ்வாய் அன்று பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபாச படக்காட்சிகளை ஒளிப்பரப்பியதற்காக எம்.பி.சி மேக்ஸ் சேனல் மீது புகார் கூறியும் விமர்சனம் செய்தும் சவுதி அரேபியாவிலிருந்தும் மற்றும் மற்ற அரபு நாடுகளில் இருந்தும் “சப்க்” என்ற அரபு நாளிதல் தங்களுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளது. “சப்க்” நாழிதல் ஆபாச காட்சி கடந்த திங்கள் அன்று எம்.பி.சி மேக்ஸ் சேனலில் ஒளிப்பரப்பட்டது என்று கூறியுள்ளது. ஆனால் ஒளிபரப்பட்ட காட்சி குறித்து விரிவான தகவல்களை வெளியிட மறுத்துவிட்டது.
மேலும் பல தொலைகாட்சி பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவத்துள்ளது.மேலும் இந்த தொலைக்காட்சி சேனல் இதுபோன்ற தவறுகளை திரும்ப செய்யாமல் இருக்கும் வண்ணம் தண்டனை அமைய வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளது.
எம்.பி.சி மேக்ஸ் சேனல் மத்திய கிழக்கு அலைபரப்பு குழுமத்தைச் சேர்ந்தது ஆகும். இந்த சேனல் கடந்த 1991 ஆம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்டது. மேலும் தற்போது இதன் தலைமை அலுவலகம் துபாயில் அமைந்துள்ளது. சவுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இந்த தொலைகாட்சி சேனலின் உரிமையாளர் ஆவார். மேலும் ஷேக் வாளித் அல் இப்ராஹீம் இதன் தலைவராக உள்ளார்.இந்த சேனல் உட்பட இந்த குழுமத்திற்கு மொத்தம் 12 சேனல்கள் உள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment