புதுடெல்லி:ரூ.1,200 மட்டுமே விலை கொண்ட உலகின் மலிவான தொடுகணினியை (tablet PC) இந்திய அரசு அறிமுகம் செய்தது.
தற்போது மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் இந்த கணினி, இந்த் ஆண்டு இறுதியில் முழு அளவில் சந்தையில் விடப்படவுள்ளது.
டெல்லி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தப் புதிய தொடுகணினியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிமுகப்படுத்தினார்.
“இந்தச் சாதனம் உலகில் உள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் உதவியாக இருக்கும். அவர்களின் தகவல் அறிவை வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும்,” என்றார் கபில் சிபல்.
கையடக்க வடிவிலான இந்தத் தொடுகணினியை தயாரித்துள்ள டேட்டாவிண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார் சுனித் சிங் டூலி கூறுகையில், “இந்த அளவுக்கு குறைவான விலையில் இச்சாதனத்தை விற்றாலும் எங்கள் நிறுவனத்துக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும்,” என்றார்.
மேலும், “மொத்தச் செலவில் டச் ஸ்கிரீன் அமைக்க அதிகச் செலவானது. ஆனால் அதையும் 10 டாலருக்கும் குறைவான செலவில் தயாரித்துவிட்டோம்,” என்றார்.
இந்தக் கணினியின் முக்கியக் கூறுகளாவன:
* இந்தத் தொடுகணினி மாணவர்களுக்கு ரூ.1,200-ல் இருந்து ரூ.1500 வரையிலான விலையில் கொடுக்கப்படும்.
* இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சாதனத்தை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
* நாடு முழுவதும் 1 கோடி மாணவர்களுக்கு இது போன்ற கணினிகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* இந்தக் கணினியில் wifi இணைய வசதி உண்டு. அண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் மூலம் இது இயங்கும்.
* இணையத்தில் இருக்கும் செய்திகளை வாசித்துச் சொல்லும் திறனும் உண்டு.
* ஆண்டின் பிற்பகுதியில் பொதுச் சந்தையில் விற்கப்படும்போது இதன் விலை ரூ.3000-க்கும் குறைவாகவே இருக்கும்.
* இந்தக் கணினியில் வீடியோ பார்க்க முடியும். எனினும், கேமரா வசதி கிடையாது.
* 2ஜிபி எக்ஸ்டர்னல் மெமரியும், 32 ஜிபி வரை எக்ஸ்பாண்டபிள் மெமரியும் கொண்டது.
* பேட்டரி பவர் 180 நிமிடங்கள் வரை இருக்கும்.
* 2ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது.
* 254 எம்பி ரேம் கொண்டது.
* இந்தியாவைச் சேர்ந்த 70,000 இ-புத்தகங்கள், 2,100 இ-ஜர்னல்கள் மற்றும் 1,500 கல்லூரிகளை வலம் வரலாம்.
* கேம்ஸ், வீடியோகள் மற்றும் இணையத்தில் வலம் வரலாம்
0 கருத்துரைகள்:
Post a Comment