ஜெத்தா:2011-க்கான புனித ஹஜ் பயணம் சென்ற முதல் பயணக்குழுவில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
புனித யாத்திரைக்கு முதலில் புனித பயணம் மேற்கொண்ட 30,177 நபர்களில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். அதில் இருவர் இந்தியாவின் ஹஜ் கமிட்டியின் மூலம் பயணம் செய்தவர்களும், ஒருவர் தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண்டவருமாவார் என்று ஜெத்தாவின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மரணம் அடைந்தவர்களில் ஒருவரை மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஹபிஸ் அஹ்மத் ஹுசைன் கான் என்பவரின் மகன் ஃபாருக்கி ஹுசைன். எழுபது வயது உடையவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “நாங்கள் இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளோம், ஹஜ் யாத்ரீகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் மேற்க் கொண்டுள்ளோம்” என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment