குமரி மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சட்டமன்ற தேர்தலுக்குப்பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் சமச்சீர்கல்வித்திட்டம் கைவிடப்பட்டு பழைய பாடத்திட்டமே செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
இதற்கான புத்தகங்கள் வழங்க கால தாமதம் ஏற்படும் என்பதால் பள்ளிகள் திறப்பை ஜூன் 1ல் இருந்து 15ம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக அரசு அறிவித்தது.
இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் இதைத் கண்டுகொள்ளாத குமரி மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் கடந்த 1ம் தேதியே பிளஸ் 2வுக்கான சிறப்பு வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன.
திருத்துவபுரம், வாவறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சில பள்ளிகளில் நேற்று 10ம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன. குமரி மாவட்டத்தில் வடமேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அரசு உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது மாணவர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment