Tuesday, June 7, 2011

புதுவலசையில் அரபி ஒலியுல்லா தொடக்கப்பள்ளி திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா

தாசின் அறக்கட்டளை சார்பாக புதுவலசையில் அரபி ஒலியுல்லா தொடக்கப்பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜமாஅத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஜனாப்.அஹமது அமீன் மிஸ்பஹி ஆலிம் அவர்கள் கிராஅத் ஓத விழா இனிதே ஆரம்பமாகியது. அரபி ஒலியுல்லா பள்ளியின் தாளாளர் எஸ்.லியாக்கத் அலிகான் பி.காம்., அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். ஜனாப்.எம்.முகமது மைதீன் பி.எஸ்.சி.,பி.எட்.,அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மலேசியாவிலிருந்து வருகை தந்த ஜனாப் எம்.எ.டி.அப்துல் ஹாதி அவர்கள் அக்கட்டிடத்தை திறந்து வைத்தார்கள். மேலும் தாசின் அறக்கட்டளையின் சார்பாக 10ம் வகுப்பு கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ ,மாணவியர்களுக்கு (வருடம் 2010-2011) பரிசுகளும் வழங்கப்பட்டன.

தாசின் அறக்கட்டளையின் நிறுவனர், ஜனாப்.எம்.தாசின் அவர்கள் விழா பேருரை நிகழ்த்தினார்கள். தாசின் அறக்கட்டளையின் பொறுப்பாளர் நன்றியுரை நிகழ்த்தினார்.இறுதியாக ஜனாப்.எம்.காதர் இஸ்மாயில் மன்பஈ ஆலிம் அவர்கள் துஆ செய்து விழாவை இனிதே நிறைவு செய்து வைத்தார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza